/
கோயில்கள் செய்திகள் / கடலுார் திரவுபதியம்மன் கோவில் திருவிழா; தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
கடலுார் திரவுபதியம்மன் கோவில் திருவிழா; தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :214 days ago
கடலுார்; கடலுார் அடுத்த பாதிரிக்குப்பம் திரவுபதியம்மன் கோவில் தீ மிதி திருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கடலுார் பாதிரிக்குப்பம் திரவுபதியம்மன் உடனுறை தர்மராஜர் கோவில் திருவிழா, கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 2ம் தேதி திருக்கல்யாணம், 3ம் தேதி கரக திருவிழா நடந்தது. தீ மிதி திருவிழாவை முன்னிட்டு திரவுபதியம்மன் மற்றும் தர்மராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. மாலை கோவில் வளாகத்தில் நடந்த தீ மிதி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். வரும் 11ம் தேதி பட்டாபிஷேக உற்சவம் நடக்கிறது.