ஸ்ரீ ராமா நவமி; சீரடி சாயி பிருந்தாவனத்தில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம்
ADDED :215 days ago
ஒட்டன்சத்திரம்,; ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலையம் அருகில் ஸ்ரீ சீரடி சாயி பிருந்தாவனத்தில் அமைந்துள்ள ஸ்ரீ குபேர சாய்பாபா ஆலயத்தில் ஸ்ரீ ராம நவமி விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
இன்று ஏப்.6 ல் ஸ்ரீ ருத்ர ஜெப பாராயணம், விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம், ஸ்ரீ சத்திய நாராயண பூஜை நடைபெறுகிறது. இன்று காலை முதல் மாலை வரை அன்னதானமும் நடக்க உள்ளது. பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு குபேர சாய்பாபா அருளை பெற்று செல்லுமாறு ஸ்ரீ சீரடி சாயி பிருந்தாவனம் அறக்கட்டளை சார்பில் அழைக்கப்படுகிறது.