உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம்!

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம்!

சாத்தூர்: சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில், நேற்று காலை 5 மணி முதல் 12.30 மணி வரை, உலக மக்களின் நன்மை வேண்டி, 1008 சங்காபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு உற்சவ மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கோயில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி, செயல் அலுவலர் தனபாலன் , பரம்பரை அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !