உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சீதாராமர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக

காளஹஸ்தி சீதாராமர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம்  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான  சீதாராமர் கோயிலில் சீதா ராமர் திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது இந்நிலையில், சனிக்கிழமை பிற்பகல் முதல் கோயில் அதிகாரிகள் ஏற்பாடுகளில் ஈடுபட்டனர். புதிதாக கட்டப்பட்ட கோவிலில் கடந்த மூன்று வருடங்களாக உற்சவங்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை காலையில் அபிஜித் லக்னத்தில் சீதா  ராமரின் திருக்கல்யாண விழாவை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. சனிக்கிழமை பிற்பகல் முதல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, போக்குவரத்து ஆய்வாளர் கோபியின் உத்தரவின் பேரில், ஊழியர்கள் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் அருகில் உள்ள தேர் வீதி மற்றும் நகரி வீதிகள் வழியாக போக்குவரத்தை திருப்பிவிட்டு சீதா ராமர் கல்யாண (திருமண) மண்டபங்களை அமைத்தனர். மூன்று நாட்களாக, கோயில் அதிகாரிகளும் அவர்களது ஊழியர்களும் ஏற்பாடுகளில் ஈடுபட்டனர். சீதா ராமர் திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் சீர்வரிசை பொருட்கள் கோயில் அதிகாரிகள் ஊர்வலமாக கொண்டு வந்து கோயில் அர்ச்சகரிடம் வழங்கினார். முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் ஆராதனைகள் நடந்தன. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !