குதிரையுடன் தீர்த்தக்காவடி எடுத்து வந்த பழநி பக்தர்கள்
ADDED :207 days ago
பழநி; பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் குதிரை ஆட்டத்துடன் தீர்த்தக்காவடி எடுத்து வந்தனர். பழநி பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் கொடுமுடி சென்று அங்கு காவிரி ஆற்றில் தீர்த்தம் எடுத்து வருகின்றனர். பழநி மதனபுரத்தைச் சேர்ந்த பக்தர்கள் கொடுமுடி தீர்த்தம் எடுத்தபடி குதிரைகளை அலங்கரித்து குதிரை ஆட்டத்துடன் கிரிவலம் வந்தனர். பின்னர் தீர்த்த காவடிகளை பழநி கோயிலில் செலுத்தி வழிபட்டனர். இது போல் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அலகு குத்தி காவடி எடுத்து வருகின்றனர். இவர்கள் கிரி வீதியில் மயிலாட்டம், ஒயிலாட்டம், கும்மிஆட்டம், கரகாட்டம் என மேளதாளத்துடன் ஆடி வலம் வருகின்றனர்.