மீஞ்சூர் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவ தேரோட்டம்
ADDED :204 days ago
மீஞ்சூர்; வடகாஞ்சி என அழைக்கப்படும், மீஞ்சூர் காமாட்சி அம்பிகை உடனுறை ஏகாம்பரநாதர் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவ விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, சூர்யபிரபை, சந்திரபிரபை, பூதவாகனம், நாகவாகனம், ரிஷபவாகனம், அதிகார நந்தி உற்சவங்களுடன், பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடந்தது. ஏழாம் நாளான இன்று தேர்த்திருவிழா விமரிசையாக நடந்தது. காலை 9:00 மணிக்கு தேர் மாடவீதிகள் வழியாக வலம் வந்தது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில், ஏகாம்பரநாதர் வீற்றிருந்தார். மீஞ்சூர் போலீசார் மற்றும் பொன்னேரி தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.