திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அத்தி மர விக்ரகங்களுக்கு பூஜை
ADDED :199 days ago
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மூலவர்களுக்கு பாலாலயம் நடைபெற்றது. இதற்காக மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, நாரதர், கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்யகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாள் விக்ரகங்கள் அத்தி மரத்திலும், பவள கனிவாய் பெருமாள் உருவம் வரைபடமாகவும் உருவாக்கப்பட்டது. நேற்று மூன்றாம் கால யாகசாலை பூஜையில் மூலவர்களின் அத்தி மர விக்ரகங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை முடிந்தது. சண்முகர் சன்னதியில் எழுந்தருள செய்யப்பட்டு காப்பு கட்டி தீபாராதனை நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர் சண்முகசுந்தரம், மாநகராட்சி மண்டல தலைவர் சுவிதா, கோயில் துணை கமிஷனர் சூர்யநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.