உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவில் 65ம் ஆண்டு சித்திரை விழா

முத்துமாரியம்மன் கோவில் 65ம் ஆண்டு சித்திரை விழா

கோவை; தடாகம் ரோடு பால் கம்பெனி தெலுங்குபாளையம் பால் சொசைட்டி எதிர்ப்புறம் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் 65 -ம் ஆண்டு சித்திரை விழா 7ம் தேதி கணபதி ஹோமத்துடன் நடைபெற்றது. இதையடுத்து  பூச்சாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் மூலவர் அம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் சர்வ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 15ம் தேதி அக்னி கம்பம் நடுதல் நிகழ்வும் அதையடுத்து  திருவிளக்கு பூஜை, சக்தி அழைத்தல், சக்தி, சித்தி முத்தி உற்சவம், பொங்கல் வைக்கும் நிகழ்வு, மாவிளக்கு ஊர்வலம், மஞ்சள் நீராடுதல்  மற்றும் சுவாமிக்கு அபிஷேக பூஜை நடைபெறும்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !