உலகளந்த பெருமாள் கோவிலில் 24ம் தேதி சொர்கவாசல் திறப்பு
ADDED :4684 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா வரும் 24ம் தேதி நடக்கிறது. நடுநாட்டுத் திருப்பதி என போற்றப்படும் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வரும் 24ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது. முன்னதாக வரும் 14ம் தேதி பகல் பத்து உற்சவம் துவங்குகிறது. தினசரி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் புறப்பாடு நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 23ம் தேதி மாலை பெருமாள் மோகன அலங்காரத்தில் எழுந்தருள்கிறார். தொடர்ந்து திருமங்கை ஆழ்வார் மோட்சம் நடக்கிறது. பின்னர் 24ம் தேதி அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது. இதனைத் தொடர்ந்து இராபத்து உற்சவம் துவங்குகிறது. ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில் கோவில் நிர்வாகத்தினர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.