உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவில் தேரோட்டம்

அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவில் தேரோட்டம்

அரியாங்குப்பம்; அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவில், தேரோட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று, வடம் பிடித்து இழுத்தனர்.


அரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் கோவில் 111ம் ஆண்டு பிரமோற்சவ விழா, கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் 11 முதல் 17ம் தேதி வரை, பல்வேறு வாகனங்களில், அலங்காரம் செய்யப்பட்ட அம்மன் வீதியுலா நடந்தது. முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று காலை 7:00 மணியளவில் நடந்தது. நிகழ்ச்சியில், திரளான பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில், முதல்வர் ரங்கசாமி, வைத்திலிங்கம் எம்.பி., பாஸ்கர் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன் உட்பட பலர் பங்கேற்றனர். இன்று 19ம் தேதி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மஞ்சள் நீராட்டு விழா, இரவு 10:00 மணிக்கு தெப்ப உற்சவம் நடக்கிறது. வரும் 25ம் தேதி இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !