விக்கிரவாண்டி முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா
ADDED :197 days ago
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி முத்தமாரியம்மன் கோவிலில் சித்திரை மாத முதல் வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு சாகை வார்த்தல் நடந்தது. விசுவாவசு வருட சித்திரை மாத முதல் வெள்ளியை முன்னிட்டு முத்துமாரியம்மன், நிலையம்மன், கழுத்தம்மன், வினாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி துர்க்கை உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. பின்னர் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து தீபாரானை நடந்தது. குளக்கரையிலிருந்து சக்தி கரகம் ஜோடித்து ஊர்வலமாக கொண்டு சென்று, அம்மனுக்கு சாகை வார்த்து படையலிட்டனர். விக்கிரவாண்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.