உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேம்படி மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா; அம்மனுக்கு அபிஷேகம்

வேம்படி மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா; அம்மனுக்கு அபிஷேகம்

காரைக்கால்; காரைக்கால் மதகடி, வேம்படி மாரியம்மன் கோவிலில் 30ம் ஆண்டு சித்திரை திருவிழா நடந்தது. திருவிழாவை முன்னிட்டு இன்று காலை வேம்படி மாரியம்மனுக்கு சந்தனம், பால், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பலவகை திரவியங்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. தொடர்ந்து பெண்கள் அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றி கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !