வலசைபட்டி முத்தாலம்மன் கோயில் திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :182 days ago
எஸ்.புதூர்; எஸ்.புதூர் அருகே வலசைபட்டி முத்தாலம்மன் கோயில் பங்குனித் திருவிழா மார்ச் 29 ல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு பல்வேறு வழிபாடுகள் நடத்தப்பட்டது. பெண்கள் கும்மியடித்து அம்மனை வழிபட்டனர். நேற்று வலசைபட்டி, இரணிபட்டி, அம்மாபட்டி, பள்ளபட்டி, ராசாப்பட்டி, புல்லாம்பட்டி, தேத்தாம்பட்டி, கடமலைப்பட்டி கிராமங்களில் இருந்து பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக பல்வேறு வேடமணிந்து வந்தனர். வலசைபட்டி கோயில் வீட்டில் அனைவரும் ஒன்று கூடி வழிபாடு நடத்தினர். அங்கிருந்து முத்தாலம்மன் கோயிலுக்கு ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடந்தது .