உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் சித்திரை விழா கொடியேற்றம்

ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் சித்திரை விழா கொடியேற்றம்

ராமநாதபுரம்; ராமநாதபுரம் மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கி மே 9 வரை நடக்கிறது. ராமநாதபுரம் சமஸ்தானத்தை சேர்ந்த  மீனாட்சி சமேத  சொக்கநாதர் கோயில் மிகவும் பழமையானது. இவ்வாண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று (ஏப்.29) காலை  சுவாமி, அம்மனுக்கு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜைகள் செய்து, கொடிமரத்தில்  கொடியேற்றம் நடந்தது. விழாவின் முக்கிய  நிகழ்ச்சியாக மே 6 ல்  மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்,  7ல்  திக்விஜயம்,  8ல் மீனாட்சி சொக்கநாதர் சுவாமிக்கு காலை 9:30மணிக்கு திருக்கல்யாணம், அன்று  மதியம் அன்னதானம் நடக்கிறது. விழாவில் தினசரி காமாட்சி, சிவபூஜை உள்ளிட்ட அலங்காரங்களில் மீனாட்சி அம்மனுக்கு பூஜைகள் நடக்கிறது.  மே 9 ல்  தீர்த்தவாரி, பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி திருவீதி உலாவுடன் சித்திரை திருவிழா நிறைவுபெற உள்ளது. 





தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !