உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தரேவு வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

சித்தரேவு வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவினை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது. வரதராஜ பெருமாளுக்கு மஞ்சள், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தன. அதனை தொடர்ந்து கொடிமரத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்று விழா நடந்தது. சித்திரை திருவிழாவின் மே. 8ல் திருக்கல்யாணம், 11ல் வரதராஜ பெருமாள் குதிரை வாகனத்தில் சன்னதியில் இருந்து புறப்படுதல், 12-ல் வரதராஜ பெருமாள் அய்யம்பாளையம் மருதாநதி ஆற்றில் இறங்குதல், 13ல் தசாவதாரம், 14ல் ஆஞ்சநேயர் வாகனத்தில் அய்யம்பாளையம் நகர் வலம், 15ல் பூ பல்லாக்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் வீரசிவபாலன், கோவில் தலைமை அர்ச்சகர் ராஜ நரசிம்மஅய்யங்கார், விழா குழுவைச் சேர்ந்த முருகன், மூர்த்தி, ராமுவேல், புகழேந்திரன், சுதாகர், சந்திரசேகர், கண்ணன் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !