ஸ்ரீ சங்கரஜெயந்தி வைபவம்; வீதி உலா வந்து அருள்பாலித்த ஆதிசங்கரர்
ADDED :172 days ago
கோவை; கோவை ராம்நகர் கோதண்ட ராமஸ்வாமி தேவஸ்தானத்தில் நேற்று ஸ்ரீ சங்கரஜெயந்தி வைபவம் பக்தர்கள் சூழ விமரிசையாக நடந்தது. கோவை ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் ஸ்ரீ சங்கரஜெயந்தி வைபவம் நேற்று காலை மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. யாகசாலை பூஜைகளை தொடர்ந்து ஸ்ரீமத்அபிநவ வித்யா தீர்த்த பிரவசன மண்டபத்தில் ஆதிசங்கரர் திருவுருவம் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள்விக்கப்பட்டது. மாலை, 5:45 மணிக்கு ராம்நகர் திருப்பாவை, திருவெம்பாவை கமிட்டியர் நாமசங்கீர்த்தனங்களை பாராயணம் செய்ய, ஆதிசங்கரர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி, மங்கள வாத்தியங்கள் முழங்க ராம்நகர் வீதிகளில் திருவீதி உலா வந்தார். மாலை, 6:30 மணிக்கு ஆச்சார்யர்கள் ஸ்ரீ ரங்காஜி மற்றும் சூர்யாப்ரியாஜி ஆகியோர் சங்கரஜெயந்தி சத்சங்கம் நிகழ்த்தினர். திரளான பக்தர்கள் தரிசித்தனர்.