உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தம் புதுசாமிகள்

புத்தம் புதுசாமிகள்

நவீனகால மனிதர்கள், பூர்வீகக் குடிகளான பழங்கால மனிதர்கள் என்று மனிதர்களை இருவகையாகப் பிரிப்பது போல, வேதம் கடவுளைப் பூர்வகால பரமாத்மா, நவீனகால பரமாத்மா என்று பிரிக்கிறது.  வைகுண்டத்திலே பாற்கடல் வாசனாக வீற்றிருக்கும் பரவாசுதேவனே பூர்வீகமானவன். அதாவது பழமை மிக்கவன். அவனிடமிருந்தே இந்த பிரபஞ்சமே உற்பத்தியானது. பூலோக உயிர்களைக் காப்பதற்காக தன் உயர்ந்த ஸ்தானத்தை விட்டு அவ்வப்போது அவன் இறங்கி வருவதுண்டு. அதையே அவதாரம் என்று குறிப்பிடுகிறோம். நரசிம்ஹ ராம கிருஷ்ணாத் அவதாரைஹி என்கிறது வேதம். பரம்பொருள், சாமான்ய மக்களிடம் கலந்து வாழ்வதற்காக பூமியில் அவதரிக்கிறார். இவற்றில் நரசிம்ம, ராம, கிருஷ்ண அவதாரங்கள் குறிப்பிடத்தக்கவை. இவற்றை வேதம் நவீனமான பரமாத்மா என்று போற்றுகிறது. நவீனம் என்றால் புதுமையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !