மனிதனைப் பாடாதே! இறைவனைப் பாடு!
ADDED :4725 days ago
மன்னர்கள் தரும் செல்வத்தைப் பெரிதாக நினைக்காமல், கடவுளை மட்டுமே சிந்தித்த மகான்கள் பலர். சரபோஜி மன்னர் கொடுத்த பொருளைக் காட்டிலும், ராம பக்தியே பெரிது என்று பாடிய, ராஜாவுடைய நிதி சவுக்யம் தருமா? ராமனுடைய சந்நிதி சவுக்யம் தருமா?, என்ற தியாகராஜரின் பாடல் புகழ்பெற்றது. சுந்தரர், அவனையும் இவனையும் பாடாதீர்கள். சிவனை பாடுங்கள், என்று வழிகாட்டுகிறார். மகேந்திரவர்மன் அப்பரை தண்டிக்க ஆள் அனுப்பிய போது, நாமார்க்கும் குடியல்லோம்! நமனை அஞ்சோம்! என்று வீறு கொண்டு எழுந்து நின்றார். நம்மாழ்வார், வாய் கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன், என்று மனிதனைப் பாடும் கவிஞன் நான் கிடையாது என்று தன்னைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.