செஞ்சியில் மதுரகவி ஆழ்வார் வைணவ சபை 35 ஆம் ஆண்டு மாநாடு
செஞ்சி; செஞ்சியில் மதுரகவி ஆழ்வார் சபை சார்பில் வைணவ மாநாடு நடந்தது.
செஞ்சி வீராசாமி திருமண மண்டபத்தில் மதுர கவி ஆழ்வார் திரு நட்சத்திர பரிபாலன சபை சார்பில் 35 ஆம் ஆண்டு வைணவ மாநாடு நடந்தது. காலை 8 மணிக்கு உதவி ஸ்ரீதேவி சமையல் பெருமாள் ஊர்வலம் நடந்தது. சபை செயலாளர் தாமோதரன். ஆதிமூலம் ஆகியோர் மாநாட்டை துவக்கி வைத்தனர். துணைத்தலைவர் ஜனார்த்தனன் கருட கொடியேற்றினார். ராஜலட்சுமி, தொல்பாவை, சுபிக்ஷா தனஸ்ரீ ஆகியோர் பெருமாள் துதி பாடினர். சபைத் தலைவர் தீனதயாளன் வரவேற்றார். கவுரவத் தலைவர் டாக்டர் ரமேஷ் பாபு, ஸ்ரீரங்க பூபதி கல்லூரி தாளாளர் ரங்க பூபதி வாழ்த்துரை வழங்கினர். காஞ்சிபுரம் ராஜஹம்ஸம் ஆச்சர்ய சுவாமிகள், ரங்கநாத ஆச்சரிய சுவாமிகள், சென்னை அனந்த பத்மநாப சுவாமிகள், திண்டிவனம் ஆஷா நாச்சியார் சொற்பொழிவாற்றினர். மதுராந்தகம் ரகுவீரபட்டாச்சாரியார் சுவாமிகள் சிறப்புரை நிகழ்த்தினார். சபை பொருளாளர் சுந்தர் நன்றி கூறினார்.