சாத்தையனார் கோயிலில் வடம் எடுத்தல் விழா
ADDED :169 days ago
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தனுாரில் உள்ள மகா சாத்தையனார் கோயில், சித்திரை விழா ஏப்., 30, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும், கோயிலில் குறிப்பிட்ட இடைவெளியில் பறை முழக்கம் செய்யப்பட்டு, மூலவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றன. நேற்று மாலை கோயிலில் இருந்து, ஊர் நடுவில் உள்ள அரச மரத்திற்கு வடம் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கு அபிஷேகம் செய்து, கோயிலில் இருந்து பக்தர்கள் வடத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று அரச மரத்தில் வைத்து வழிபாடு செய்தனர். இன்று தங்கு வடம் நிகழ்ச்சி நடைபெற்று, நாளை முக்கிய விழாவான எருது கட்டு விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சாத்தனுார் மற்றும் சுற்றுப்புற பகுதி கிராமத்தினர் செய்து வருகின்றனர்.