பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் திக் விஜயம்; நாளை திருக்கல்யாணம்
ADDED :227 days ago
பரமக்குடி; பரமக்குடி ஈஸ்வரன் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்று திக் விஜயம் நடந்தது.
பரமக்குடி விசாலாட்சி அம்பிகா, சந்திர சேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் சித்திரைத் திருவிழா நடக்கிறது. நேற்று காலை சிவகாமசுந்தரி, நடராஜமூர்த்தி வீதி உலா வந்தனர். இரவு 7:00 மணிக்கு சந்திர சேகர சுவாமி பிரியா விடையுடன் மற்றும் விசாலாட்சி அம்மன் தனித்தனியாக குதிரை வாகனத்தில் அமர்ந்தனர். பின்னர் முக்கிய வீதிகளில் வலம் வந்து சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நிச்சயதார்த்தம் நடந்தது. இன்று தபசு திருகோலமும், நாளை காலை திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.