உத்தரகோசமங்கை கோயிலுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
ADDED :233 days ago
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகின்றனர். பல்ஹாம் தாக்குதலைத் தொடர்ந்து கோயில்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் கோயிலின் நுழைவாயில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை துவங்கியுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சுவாமி தரிசனம் செய்வதற்காக கோயிலுக்கு வருகை தருகின்றனர்.