கொடைக்கானலில் ஆற்றில் இறங்கிய கள்ளழகர்; பக்தர்கள் பரவசம்
ADDED :247 days ago
கொடைக்கானல், கொடைக்கானல் ஆனந்தகிரி பெரியமாரியம்மன் கோயில் விழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடந்தது. ஏப்.29 ல் கொடியேற்றத்துடன் துவங்கிய விழவில் அம்மன் நாள்தோறும் மின்னொளியில் நகர்வலம் வருதல் நடந்தது. விழாவில் ஶ்ரீ லோக நாயகன் சங்கரலிங்கேஷ்வரர், லோகநாயகி ஸ்ரீ கோமதாம்பிகை திருக்கல்யண வைபவத்தை தொடர்ந்து ஶ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலிருந்து புறப்பட்ட கள்ளழகர் ஆனந்தகிரி தெருக்களில் வலம் வந்து பெரியமாரியம்மன் கோயில் வந்தடைந்து பின் டோபி கானல் ஆற்றில் இறங்கினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.