/
கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோத்சவம் துவக்கம்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோத்சவம் துவக்கம்
ADDED :189 days ago
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டிற்கான 10 நாள் வைகாசி மாத பிரம்மோத்சவம், நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.இதில், காலை 4:20 மணிக்கு மேல், 6:00 மணிக்குள் கோவில் கொடிமரத்திற்கு பல்வேறு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கருடாழ்வார் படம் இடம்பெற்ற கொடி, கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவியுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், வீதியுலா வந்தார். மாலை சிம்ம வாகன உத்சவம் நடந்தது. மூன்றாள் நாள் பிரபல உற்சவமான நாளை காலை, கருடசேவை உத்சவம் நடக்கிறது. இதில் அதிகாலை 4:00 மணிக்கு கோபுர தரிசனம் நடக்கிறது. ஏழாம் நாள் உத்சவமான, வரும் 17ம் தேதி, காலை தேரோட்டமும், 19ம் தேதி, காலை 10:00 மணிக்கு, அனந்தசரஸ் புஷ்கரணி என அழைக்கப்படும். தெப்பகுளத்தில் தீர்த்தவாரியும் நடக்கிறது.