பெரிய கருணை பாளையம் காமாட்சி அம்மன் கோவிலில் பொங்கல் விழா
ADDED :161 days ago
அவிநாசி; பெரிய கருணை பாளையம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் 15ம் ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது.
அவிநாசி வட்டம்,பெரியகருணை பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் 15ம் ஆண்டு பொங்கல் விழா கடந்த 12ம் தேதி கணபதி ஹோமம், கிராம சாந்தி ஆகியவற்றுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து காப்பு கட்டுதல், அலங்கார பூஜை, அம்மை அழைத்தல், மாவிளக்கு ஊர்வலம், பொங்கல் வைத்தல், அலகு குத்தி தேர் இழுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நாளை மஞ்சள் நீர் விழாவுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.