தடாகம் சக்தி முத்துமாரியம்மன், சக்தி கணபதி கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :207 days ago
கோவை; தடாகம் ரோடு ஆர். எஸ். புரம் வாழைக்காய் மண்டி அருகே அமைந்துள்ள சக்தி முத்துமாரியம்மன், சக்தி கணபதி, சக்தி வேலவன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. இதன் முதல் நிகழ்வாக கடந்த சனிக்கிழமை மங்கல இசையுடன் கணபதி பூஜை நடந்தது. அதை தொடர்ந்து கும்ப கலசத்திற்கு கும்ப அலங்காரம் நடைபெற்றது. அடுத்ததாக முதற்கால வேள்வி நடைபெற்றது. இரண்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டாம் கால வேள்வி நடைபெற்று, கும்ப கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அலங்காரத்தில் சக்தி முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்ச்சியின் நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.