மேலூர் திரவுபதி அம்மன் கோயிலில் பால்குடம் எடுத்த பக்தர்கள்
ADDED :155 days ago
மேலூர்; மேலூர் திரவுபதி அம்மன் கோயில் வைகாசி திருவிழா மே 16 கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று பக்தர்கள் மண்கட்டி தெப்பக்குளத்தில் இருந்து பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்து அடைந்தனர். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து தர்மராஜாவுக்கும் திரவுபதி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இவ்விழாவில் மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.