உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடலுார் தருமசாலையில் 159ம் ஆண்டு துவக்க விழா; திருஅருட்பா முற்றோதல்

வடலுார் தருமசாலையில் 159ம் ஆண்டு துவக்க விழா; திருஅருட்பா முற்றோதல்

கடலுார்; கடலுார் மாவட்டம், வடலுாரில், 1867ம் ஆண்டு, சத்திய தருமச்சாலையை ராமலிங்க அடிகளார் நிறுவினார். அன்றைய தினம் அவர் ஏற்றி வைத்த அணையா அடுப்பு தொடர்ந்து எரிந்து வருகிறது. அன்று முதல் தருமச்சாலையில் தினசரி மூன்று வேளை அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. தருமசாலை 159ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, கடந்த வாரம் முழுதும் ‘அருட்பெருஞ்ஜோதி’ மகாமந்திரம் மற்றும் திருஅருட்பா, முற்றோதல் நடந்தது. தருமச்சாலையில் நேற்று வள்ளலாரின் வரலாறு குறித்த வில்லுப்பாட்டு, இசை நிகழ்ச்சி, சொற்பொழிவு, திருஅருட்பா இன்னிசை நடந்தது. ஏற்பாடுகளை ஹிந்து சமய அறுநிலையத்துறை அதிகாரிகள், அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர். இரண்டாம் நாளான இன்று நகைச்சுவை பேச்சாளர் ராமலிங்கம் சொற்பொழிவு நிகழ்த்துகிறார். நாளை வரை இசை விழா நடக்கிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !