போகர் ஜெயந்தி; பழநி முருகன் கோயிலில் மரகதலிங்கத்திற்கு 16 வகை அபிஷேகம்
ADDED :153 days ago
பழநி; பழநி முருகன் கோயில் போகர் சன்னதியில் போகர் ஜெயந்தி விழா நடைபெற்றது.
பழநி முருகன் கோயிலில் மூலவர் சிலை நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. இதனை போகர் சித்தர் உருவாக்கியுள்ளார். இவருடைய ஜீவசமாதி, பழநி கோயிலில் உள்ளது. நேற்று போகர் சித்தரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு உச்சி கால வேளையில் புவனேஸ்வரி அம்மன், மரகதலிங்கம் ஆகியவற்றிற்கு 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றது. அதன் பின் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் வெளி மாநில, மாவட்ட, உள்ளூர் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.