உசிலம்பட்டி பத்திரகாளியம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் விழா
ADDED :149 days ago
உசிலம்பட்டி; உசிலம்பட்டி பத்திரகாளியம்மன், தெப்பத்து கருப்பசாமி கோவில் வைகாசி உற்சவ விழாவில் இன்று அம்மன் பூத வாகனத்தில் எழுந்தருளி நகர் வலம் வந்தார். தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து கோயிலில் மூல ஸ்தானத்தில் உள்ள பத்திரகாளியம்மனுக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அக்கினிச்சட்டி, மாவிளக்கு எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.