/
கோயில்கள் செய்திகள் / மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு வெற்றியடைய திருப்பரங்குன்றத்தில் விரதம் துவக்கம்
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு வெற்றியடைய திருப்பரங்குன்றத்தில் விரதம் துவக்கம்
ADDED :165 days ago
திருப்பரங்குன்றம்; மதுரையில் ஜூன் 22ல் நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு சிறப்புடன் வெற்றியடைய வேண்டியும், மாநாட்டு பணிகளில் பங்கேற்கவும் திருப்பரங்குன்றத்தில் பா.ஜ., வினர் மாலை அணிந்து விரதம் துவங்கினர்.
திருப்பரங்குன்றம் மண்டல் தலைவர் வேல்முருகன் தலைமையில் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட பா.ஜ., நிர்வாகிகள் நேற்று சரவணப்பொய்கை விநாயகர் முன்பு மாலை அணிந்தனர். பின்பு அவர்கள் சுப்பிரமணிய சுவாமி கோயில், மலைமேல் உள்ள காசி விசுவநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விரதத்தை துவக்கினர். மாவட்ட தலைவர் சிவலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் கதலி நரசிங்கபெருமாள், நிர்வாகிகள் வெற்றிவேல், முருகன், கபிலன், ஆறுமுகம், ராக்கப்பன், இளையராஜா கலந்து கொண்டனர்.