காஞ்சிபுரத்தில் பல்லவர் கால மணற்கல் விநாயகர் சிற்பம் கண்டெடுப்பு
ADDED :206 days ago
கோனேரிகுப்பம்; காஞ்சிபுரம் ஒன்றியம், இந்திரா நகரில் முனைவர் மு.அன்பழகன், காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சு.உமாசங்கர் ஆகியோர், நேற்று கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மணற்கல் விநாயகர் சிற்பத்தை கண்டெடுத்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘கண்டெடுக்கப்பட்ட விநாயகர் சிற்பம், 39 செ.மீ. உயரமும், 39 செ.மீ. அகலமும், 10 செ.மீ. தடிமனும் கொண்டது. மணற்கல்லால் செய்யப்பட்டதால் இந்த சிற்பம், தற்போது முழுதும் மழுங்கிய நிலையில் காணப்படுகிறது. லலிதாசனத்தில் அமர்ந்துள்ள விநாயகருக்கு நான்கு கைகளும் தலையில் மகுடமும் காணப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்லவர் கால விநாயகர் மணற்கல் சிற்பம் கண்டெக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும்’ என்றனர்.