உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூங்கில்துறைப்பட்டு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

மூங்கில்துறைப்பட்டு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அருகே மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த பாக்கம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில்ஆண்டுதோறும் சித்திரை தேர் திருவிழா நடக்கிறது. இந்தாண்டிற்கான விழா, கடந்த 10 நாட்களுக்கு முன், கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமிக்கு அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது. மாலையில் அம்மன் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, அம்மனுக்கு பால்குடம் ஊர்வலமும், சாகை வார்த்தல் திருவிழாவும் நடந்தன. இந்நிலையில் நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. கிராமம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !