கோவை பிரசன்ன மகா கணபதி கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :490 days ago
கோவை; வைகாசி மாதம் சதுர்த்தி திதியை முன்னிட்டு கோவை ராம் நகர் பிரசன்ன மகா கணபதி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவர் விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் சர்வ புஷ்ப அலங்காரத்தில் மூலவர் விநாயகப் பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து அருகம்புல் சாத்தி விநாயகரை வழிபட்டனர்.