திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக விழா துவக்கம்
ADDED :208 days ago
திருவாடானை; திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது. திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 11:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. முன்னதாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. ஜூன் 8 ல் தேரோட்டம் நடக்கிறது. பிரியாவிடையுடன் ஆதிரெத்தினேஸ்வரர் அமர்ந்த தேரும், சிநேகவல்லி அம்மன் அமர்ந்த மற்றொரு தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுப்பார்கள். மறுநாள் தீர்த்தவாரியும், விசாகத்தை முன்னிட்டு அன்றைய தினம் கோயிலில் அமைந்துள்ள முருகனுக்கு பால்குடம் ஊர்வலம் நடைபெறும். விழா நாட்களில் பூதம், கைலாசம், யானை, வெள்ளி ரிஷபம், இந்திர விமானம், குதிரை போன்ற வாகனங்களில் சுவாமி வீதி உலா நடக்கிறது.