உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி விசாக விழா துவக்கம்
ADDED :212 days ago
கோவை; உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி விசாக விழா நேற்று 2ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதில் உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இதையடுத்து கோவில் வளாகம் முன் அமைந்துள்ள கொடி மரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியானது நேற்று முதல் 12ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் உற்சவர் ஹம்ச வாகனம், சேஷ வாகனம், பஞ்சமுக ஹனுமான் வாகனம், கருட வாகனத்தில் காட்சி தருகிறார். அதை தொடர்ந்து திருக் கல்யாண உற்சவம் நடைபெறும், தொடர் நிகழ்வாக யானை வாகனம், குதிரை வாகனம் ஆகியவற்றில் பக்தர்களுக்கு சுவாமி காட்சி அளிக்க உள்ளார்.