சின்ன கோட்டக்குப்பம் முத்துமாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :165 days ago
கோட்டக்குப்பம்; சின்ன கோட்டக்குப்பம் முத்துமாரியம்மன் கோவில் மகோற்சவத்தை முன்னிட்டு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. சின்ன கோட்டக்குப்பத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில், செண்பகவள்ளி சமேத செம்புலிங்கேஸ்வரர் கோவில் மகோற்சவம் கடந்த மாதம் 30ம் தேதி துவங்கியது. அன்றிருந்து தினந்தோறும் சுவாமி வீதியுலா நடந்து வந்தது. நேற்று முன்தினம் காலை 9;00 மணிக்கு அபிேஷக ஆராதனை, பகல் 11;00 மணிக்கு வல்லாளன் கோட்டை அழித்தல், காத்தான் கழுவேறுதல் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு அபிேஷக ஆராதனையும், அதன் தொடர்ச்சியாக காத்தவராய சுவாமிக்கும், ஆரிய மாலா கருப்பழகி சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. திருமணக்கோலத்துடன் சுவாமி வீதியுலா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.