தேவதானம் நற்சாடை தவிர்த்தல் உடைய சுவாமி கோயில் திருக்கல்யாணம்
ADDED :166 days ago
சேத்துார்; சேத்துார் அருகே தேவதானம் நற்சாடை தவிர்த்தல் உடைய சுவாமி கோயில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது.
இக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா மே 31ல் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி அம்பாள் பல்வேறு அலங்காரங்களில் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இன்று அதிகாலை 2:00 மணிக்கு திருக்கல்யாண வைபவங்கள் நடந்தது. முன்னதாக நச்சாடை தவிர்த்த அருளிய சுவாமி ராஜ அலங்காரத்திலும் அன்னை தவம் பெற்ற நாயகி மணக்கோலத்திலும் திருமணம் நடந்தது. பெண்கள் திருமாங்கல்ய கயிறை மாற்றிக் கொண்டனர். கல்யாண விருந்து பிரசாதம் வழங்கப்பட்டது.