உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் வைகாசி விசாக தேரோட்டம்; வெற்றிவேல் வீரவேல் கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

பழநியில் வைகாசி விசாக தேரோட்டம்; வெற்றிவேல் வீரவேல் கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

பழநி; பழநி, ரத வீதிகளில் வைகாசி விசாக தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.


பழநி, கிழக்கு ரதவீதி, பெரியநாயகிகோயிலில் கொடி கட்டி மண்டபத்தில் வசந்த உற்ஸவமான வைகாசி விசாக விழா ஜூன் 3ல் துவங்கியது. விழா நாட்களில் தந்த பல்லாக்கு, தங்கமயில், காமதேனு, ஆட்டுக்கடா, தங்க குதிரை, வெள்ளி யானை, வெள்ளி மயில் வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. ஜூன் 8ல் வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இன்று (ஜூன் 9) மாலை 4:30 மணிக்கு பக்தர்கள் வெற்றிவேல் வீரவேல் கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடிக்க, வைகாசி விசாக தேரோட்டம் ரதவீதிகளில் சிறப்பாக நடந்தது. கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஜூன் 12ல் திருஊடல் நிகழ்ச்சி நடைபெறும். அதன் பின் இரவு கொடி இறக்குதலுடன் விழா நிறைவடைய உள்ளது. விசாக விழா கலை நிகழ்ச்சிகள் கோயில் மண்டபத்தில் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !