அரசமங்கலம் வரதராஜ பெருமாள் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை
ADDED :202 days ago
விழுப்புரம்; அரசமங்கலம் வரதராஜ பெருமாள் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. விழுப்புரம் அருகே அரசமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில், பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. காலை 9.00 மணிக்கு மூலவர் வரதராஜ பெருமாளுக்கும், உற்சவ பெருமாளுக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் வரதராஜ பெருமாள் மற்றும் உற்சவ பெருமாளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்து, தாயார்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வெங்கடேஷ் பாபு, கிருஷ்ண மூர்த்தி பட்டாச்சாரியார்கள் பூஜையை மேற்கொண்டனர்.