பொன்மலை (கனககிரி) வேலாயுத சுவாமி கோவிலில் கிரிவலம்
ADDED :202 days ago
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு பொன்மலை (கனககிரி) வேலாயுத சுவாமி கோவிலில் கிரிவலம் நடந்தது. கிணத்துக்கடவு பொன்மலை (கனககிரி) வேலாயுத சுவாமி கோவிலில் பௌர்ணமியை ஒட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. பக்தர்கள் விளக்கு மற்றும் வேல் கையில் ஏந்தி மலையை சுற்றி அரோகரா கோஷங்கள் முழங்க கிரிவலம் வந்தனர். தொடர்ந்து பக்தி பாடல்கள் பாடி சுவாமி தரிசனம் செய்தனர்.