லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில் 15ம் தேதி சிரவண தீபம்
ADDED :133 days ago
விழுப்புரம்; ப.வில்லியனூர் லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில் 15ம் தேதி சிரவண தீபம் ஏற்றப்படுகிறது. விழுப்புரம் அருகே ப.வில்லியனுாரில் உள்ள பிரசித்தி பெற்ற கனகவல்லி தாயார் சமேத லட்சுமிநாராயணபெருமாள் கோவிலில், திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, சிரவண தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடக்க உள்ளது. 15ம் தேதி மதியம் 2:30 மணிக்கு, மூலவர் பெருமாளுக்கும், உற்சவர் பெருமாளுக்கும் திருமஞ்சனம் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு உற்சவர் ஸ்ரீதேவி பூதேவியுடன் கோவில் உள் புறப்பாடு நடக்கிறது. மாலை 5:30 மணிக்கு, ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கருட கம்பம் எதிரில் எழுந்தருளுகின்றனர். அதன் பிறகு சிரவண தீபம் ஏற்றப்படுகிறது.