புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தெப்பல் உற்சவம்
ADDED :332 days ago
புதுச்சேரி; புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவிலில் 39ம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவை யொட்டி, தெப்பல் உற்சவம் நடந்தது. புதுச்சேரி நகப்பகுதியில் அமைந்துள்ள பெருந்தேவி நாயிகா சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில் 39ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 2ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் காலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று இரவு தெப்பல் உற்சவம் நடந்தது. முன்னதாக காலை பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.