உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை ஐயப்ப சுவாமிக்கு ஆனி மாத சிறப்பு பூஜை

வால்பாறை ஐயப்ப சுவாமிக்கு ஆனி மாத சிறப்பு பூஜை

வால்பாறை; ஆனி மாத முதல் நாளான நேற்று, ஐயப்பசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்பசுவாமிக்கு, ஆனி மாத முதல் நாளான நேற்று காலை, 5:00 மணிக்கு சிறப்பு யாக பூஜையும், அதனை தொடர்ந்து அபிஷேக பூஜை நடந்தன. பின் காலை, 11:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜையில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர். இதே போல் வால்பாறை வாழைத்தோட்டம் ஐயப்பசுவாமி கோவிலிலும் நேற்று காலை சிறப்பு அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !