உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி அபிஷேகம்
ADDED :247 days ago
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி பூஜை நடந்தது. உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி பூஜை கோலகாலமாக நடந்து வருகிறது. இன்று தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு காலை 10:00 மணிக்கு மூலவர் வராகி அம்மனுக்கு 16 வகை அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அம்மனுக்கு பழங்கள், கிழங்குகள், பட்டுப் புடவை உள்ளிட்டவைகள் நெய்வேத்தியமாக சாற்றப்பட்டன. கோயில் வளாகத்தில் உள்ள அம்மி கல்லில் ஏராளமான பெண்கள் பச்சை விரலி மஞ்சள் அரைத்து உருண்டையாக பிடித்து நேர்த்திக்கடன் பூஜைகளை நிறைவேற்றினர். பிரசாதம் வழங்கப்பட்டது.