உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி ம்ருத்யுஞ்சய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்; பக்தர்கள் பரவசம்

காளஹஸ்தி ம்ருத்யுஞ்சய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்; பக்தர்கள் பரவசம்

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வீற்றிருக்கும் ம்ருத்யுஞ்சய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் செய்யப்பட்டன. கோயிலில் வாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு உற்சவம்  நடத்துவது வழக்கம். நேற்று திங்கட்கிழமை காலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள்  நடத்தப்பட்டன. திங்கட்கிழமை சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த நாள் என்பதால், ஷோடஷ அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பால், பஞ்சாமிருதம், சந்தனம், விபூதி மற்றும் பச்சகர்பூரம் ஆகியவற்றால் சாமி க்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பல்வேறு வகையான நறுமண மலர்கள், மாலைகள் மற்றும் வெள்ளி நாக ஆபரணங்களால் இறைவனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, தீப தூபங்கள் சமர்ப்பிக்க பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !