நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு 400 கிலோ மாம்பழங்களால் சிறப்பு அலங்காரம்
ADDED :179 days ago
நாமக்கல்; நாமக்கல் நகரின் மையப்பகுதியில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். முக்கிய விழா நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் தங்கக்கவசம், முத்தங்கி அலங்காரம், வடை மாலை சாத்துப்படி உள்ளிட்டவை கட்டளைதாரர்கள் மூலம் நடக்கிறது. இதேபோல் பக்தர்கள் பல்வேறு பொருள்களால், விதவிதமான அலங்காரம் செய்து ஆஞ்சநேயர் சுவாமியை பக்தி பரவசத்துடன் வழிபாடு நடத்தி வருகின்றனர். அதன்படி, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 400 கிலோ எடை கொண்ட, 2,000 மாம்பழங்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.