பெத்தாட்சி விநாயகர் கோயிலில் உலக நன்மைக்காக திருவாசக முற்றோதல்
ADDED :183 days ago
தேனி; தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் நடராஜன் சிவகாமியம்மாள் சுவாமி முன் ஆனி திருமஞ்சனத்தையொட்டி உலக நன்மைக்காக திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. காலை முதல் மாலை வரை நடந்தது. சிவனடியார்கள் கூட்டத்தினர் முற்றோதுதல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் தேனி, என்.ஆர்.டி.,நகர், அல்லிநகரம், அரண்மனைப்புதுார் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்றனர்.கோயில் குருக்கள் சங்கர் தலைமையில் பிற அர்ச்சகர்கள் ஒருங்கிணைத்தனர்.