ஆனி முதல் வெள்ளி; பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :411 days ago
கோவை; பெரிய நாயக்கன்பாளையம், குப்பிச்சிபாளையம் ரோடில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆனி மாதம் முதல் வெள்ளிகிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் விபூதி காப்பு அலங்காரத்துடன் சர்வ புஷ்ப அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.