திருப்போரூர் திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா நிறைவு
ADDED :123 days ago
திருப்போரூர்; திருப்போரூர் திரவுபதி அம்மன் கோவிலில் நடைபெற்ற, அக்னி வசந்த விழா, விடையாற்றி உற்சவத்துடன் நிறைவடைந்து. திருப்போரூரில், பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. அக்னி வசந்த விழா , கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும், இரவில் திருவீதியுலாவும் நடைபெற்றது. கடந்த 22ம் தேதி காலை துரியோதனன் படுகளம், மாலையில் தீ மிதி திருவிழா, 23ம் தேதி தருமர் பட்டாபிஷேகம் நடைபெற்றது. நேற்று விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவடைந்தது. இரவு 8:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபராதனையும் நடைபெற்றது. உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.